All Technology’s Available Here

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.

அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள்Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.
இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.


Share:

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  

இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.
Share:

2500 இந்திய ரூபாய் பெறுமதியான Icecream PDF Converter மற்றும் PDF Split & Merge மென்பொருள்கள் இலவசமாக.


இன்று அதிகமான ஆவணங்கள் PDF வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றது.
இவ்வாறு PDF வடிவில் உருவாக்கப்படும் ஆவணங்களை எமக்குத் தேவையான ஆவன வடிவங்களுக்கும் அல்லது வேறு வடிவங்களில் இருக்கக் கூடிய ஆவணங்களை PDF வடிவத்திற்கும் மாற்றிக்கொள்ள ஏராளமான மென்பொருள்கள் மற்றும் இணையதளங்கள் எமக்கு துணை புரிகின்றன.
அந்த வகையில் மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் பல்வேறு இணையதளங்களையும் மென்பொருள்களையும் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
இதனடிப்படையில் Icecream PDF Converter எனும் மென்பொருளும் எமது PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்காக ஏராளமான வசதிகளை தருகின்றது.
இதில் இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புகள் உள்ளன. இதன் இலவச பதிப்பில் வரையறுக்கப்பட்ட வசதிகளையே பெற முடிகின்றது என்றாலும் இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பின் மூலம் வரையரற்ற இலவச பதிப்பை விட மேலதிக வசதிகளை பெற முடியும்.
இதன் இலவச பதிப்பில் ஆகக் கூடியது 10 பக்கங்களை கொண்ட PDF ஆவணங்களையே ஏனைய ஆவன வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் ஏனைய வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை PDF வடிவிற்கு மாற்றும் போது ஆகக் கூடியது 5 பக்கங்களையே கொண்டிருத்தல் வேண்டும். எனினும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் இது போன்ற வரையறைகள் இல்லை.
Icecream PDF Converter Pro பதிப்பின் மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.
DOC, DOCX, XLSX, ODS, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML போன்ற எந்த விடிவில் அமைந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு PDF ஆவணத்தையும் JPG, BMP, DOC, ODT, HTML, TIFF, PNG, GIF, EPS,WMF, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை ஒரே PDF ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் PDF ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் கடவுச்சொற்களை இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த Icecream PDF Converter Pro எனும் மென்பொருளானது சுமார் 20 அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருளாகும்.
இருப்பினும் chip1507icecream@chip.cz எனும் முகவரிக்கு ஒரு வெற்று மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம்  Icecream PDF Converter Pro  மற்றும் Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருள்களுக்கான இலவச Licence Key ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருளானது வெவ்வேறுபட்ட PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கும் ஒரு நீண்ட PDF ஆவணத்தை வெவ்வேறாக பிரித்துக்கொள்ளவும் உதவுகின்றது. மேலும் நீங்கள் ஒன்றிணைக்கும் PDF ஆவணத்திற்கு கடவுச்சொல் இடுவதன் மூலம் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
இதனை பின்வரும் இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேலே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் இருந்து இலவச பதிப்பை தரவிறக்கி கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளின் Settings பகுதிக்கு சென்று நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்ட Licence Key ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை முழுமையான (Pro) பதிப்புக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share:

ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும்.

ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி?


1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.

2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்

4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்

5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
Share:

How to Remove undeletable files in windows using cmd ? உங்களது கணனியில் அழிக்க முடியாமல் எரர் வரும் பைல்-களை அழிப்பது எப்படி?

 

தற்போதைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக கணனிகளுக்கான வைரஸ் தாக்குதை கூறலாம். இந்த பிரச்சினையில் இருந்து எமது கணணியை பாதுகாத்து கொள்ள நாம் ஏதேனும் சிறந்த ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி வருகிறோம். என்ன தான் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எமது கணனியில் இருந்தாலும், வைரஸ்-கள் எப்படியாவது கணனியில் வந்து தொற்றிக்கொள்கின்றன.

ஏற்கனவே எமது தளத்தில் நீங்கள் கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக தொழிட்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இவ்வாறான சூழலில் வைரஸ் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களால் நமது கணனியில் இருக்கும் சில பைல்களை அழிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நேரத்தில் எந்தவிதமான மென்பொருளையும் உபயோகிக்காமல் எமக்கு தேவையானகுறித்த பைல்-ஐ அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த வேலையை செய்து கொள்ள நாம் கணனியில் இருக்கும் CMD-ஐ பயன்படுத்த போகிறோம். ஆகவே கணனியில் இருக்கும் CMD மூலம் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-களை அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் முதலாவதாக உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு குறித்த பைல்-ஐ அழிக்க முயற்சித்து பாருங்கள். அது வெற்றிபெறாவிட்டால் அடுத்த படிமுறைக்கு செல்லுங்கள்.
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று cmd-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள். அடுத்து "ரன் ஏஸ் எட்மினிஸ்டேடர்" என்பதை தெரிவு செய்து cmd-யை ஆரம்பியுங்கள்.


அடுத்து உங்களது கணனியில் cmd ஆரம்பிக்கப்படும்.



 

அதிலே DEL /F /Q /A C:\\Users\\உங்கள் யூசர்நேம்\\பைல் இருக்கும் இடம் (லொகேஷன்)\\அழிக்க வேண்டிய பைலின் பெயர்.
இவ்வாறு டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள். இப்போது குறித்த பைல் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் டிலீட் செய்யப்பட்டு விடும். உதாரணமாக : DEL /F /Q /A C:\\Users\\Tech\\Desktop\\Test.txt

ஆகவே இந்த இலகுவான முறை மூலம் உங்களது கணனியில் குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-ஐ அழித்து விட முடியும்.

Share:

உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது Samsung!



தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.
இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real time streaming மூலம் பார்க்கலாம்.
இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா?


    Share:

    Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?

    எமக்கு பிடித்த பாடல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவற்றை நாம் எமது ஸ்மார்ட்போனில் சேமித்திருப்போம் அல்லவா?

    ஆண்ட்ராய்டு டூப்ளிகேட் பைல்


    சில வேளைகளில் நாம் எமது ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிய பாடல்கள், வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்தும் பெற்றிருப்போம், அல்லது பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் வந்தவைகள் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டிருக்கும், அல்லது நாமே அவற்றை ஒன்றுக்கு பல தடவை எமது ஸ்மார்ட்போனில் வெவ்வேறு இடங்களில் சேமித்திருப்போம்.




    இதனால் எமது ஸ்மார்ட்போனில் உள்ள நினைவகம் எம்மை அறியாமலேயே நிரப்பப்பட்டுவிடுகிறது.


    எனவே இவ்வாறு ஒன்றுக்கு பல தடவை சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிக் கொள்ள உதவுகிறது Search Duplicate File எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.



    இதன் மூலம் ஒன்றுக்கு மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள MP3 பாடல்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், APK கோப்புக்கள் (செயலிகள்) என எந்த ஒன்றையும் குறுகிய நேரத்திலேயே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும்.


    இந்த செயலியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் முழுவதுமாகவோ அல்லது நீங்கள் விரும்பும் கோப்புறைகளை மாத்திரமோ தெரிவு செய்து சோதிக்க (Scan) முடியும்.





    பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரே தன்மையை கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்கள் (Files) இருந்தால் அவைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். 

    இனி அவற்றில் ஒன்றை வைத்துவிட்டு ஒரே தன்மையை கொண்ட ஏனைய கோப்புக்களை (டூப்ளிகேட் பைல்களை) குறிப்பிட்ட செயலியின் மூலமே மிக இலகுவாக நீக்கிக் கொள்ளலாம்.



    மேலும் தேடல் முடிவில் நூற்றுக்கணக்கான கோப்புக்கள் பட்டியலிடப்பட்டால் அவற்றில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள், இசைகள்/பாடல்கள் போன்றவற்றை தனித்தனியாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட செயலியில் Filter எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.

    இது தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.


    Search Duplicate File செயலியை தரவிறக்க இங்கே சுட்டுக   click skip Add then dowloadnow


    Share:

    How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

    பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.


    ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

    போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?


    திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

    இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

    போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

    முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
    அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

    இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
    அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.

    உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.

    ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

      Treehouse - Ring My Droid- screenshot thumbnail     Treehouse - Ring My Droid- screenshot thumbnail

    Share:

    Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ தீர்வு

    நம் வலைபதிவில் நாம் Comment எழுதும்போதும் மற்றவர்கள் Comment எழுதும்போதும் வலது அல்லது இடது பக்கத்தில் Comments Profile இமேஜ் தோன்றும் இதை நமது வலைபதிவில் எப்படி தொன்றவைப்பது என்பதைப் பார்க்கலாம்.  இதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது அதை சரிசெய்வதும் மிக சுலபம் கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.



    முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

     பிறகு Settings ==> Comments ==> Show profile images on comments? ==> Yes என தேர்ந்தெடுக்கவும்.
    பிறகு Save Settings கொடுத்து வெளியேறுங்கள் இப்போது உங்கள் பதிவுகளில் profile image தெரியும்.

    அப்படியும் profile images தெரியவில்லை என்றால் META TAG 'ல் உங்களுடைய title tag 'ஐ கண்டுபிடியுங்கள் கீழே உள்ளவாறு இருக்கும்.

    ( CTRL+F ) அழுத்தி title tag 'ஐ கண்டுபிடியுங்கள்.

    <title>தமிழ் கம்ப்யூட்டர்</title>

    கண்டுபிடித்த கொடிங்கின் மேலே கீழே உள்ள கோடிங்கை Paste செய்யுங்கள். 

    <b:include data='blog' name='all-head-content'/>

    மேலே உள்ள கோடிங்கை நாம் META TAG இணைக்கும்போது தவறுதலாக அழித்திருக்கலாம் இதனால் Comments Profile image தெரியாமல் போய்விடுகிறது..

    பிறகு  SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
     இப்போது உங்கள் பிளாக்கில் profile image காட்சியளிக்கும்.

    நன்றி.
    Share:

    பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி?

    நாம் தினமும் தேடுபொறிகளை உபயோகிக்கிறோம்.  உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை தேடுகிறோம்.  சொந்தமாக நமக்காக நம் பெயரில் ஒரு தேடுபொறி இருந்தால் எப்படி இருக்கும்.  நமக்கே நமக்காக நமக்கு பிடித்த வடிவில் தேடுபொறிகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.



    முதலில் Shiny Search என்ற தளத்திற்கு செல்லுங்கள் பிறகு



    Your Name என்ற இடத்தில் உங்களுடைய தேடுபொறியின் தலைப்பை கொடுங்கள்.

    Click to select style...  என்ற இடத்தில் உங்கள் தேடுபொறிக்கான பின்னணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் இப்போது உங்களுக்கான தேடுபொறி தயாராகிவிட்டது. 

    நான் உருவாக்கிய தேடுபொறி கீழே உள்ளது படத்தில் உள்ளது.


    இப்போது உலவியின் Address Bar 'ல் உள்ள URL ( example : http://www.shinysearch.com/myhome.php?theme=nycbridge&ltext=I-Kadai )' ஐ உங்களுக்கு  வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நன்றி...



    Share:

    HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?

    நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம்.  அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள் 
    வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும்.  சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம்.

    கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும்.
    முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.
     
    பிறகு Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

    <textarea name="textarea" cols="40rows="4" wrap="VIRTUAL">=====your
    code=====</textarea>
    பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள்.
    பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்.

    நீலே வண்ணத்தில் உள்ள rows="4" என்பதுதான் பெட்டியின் அகலம் உங்களுக்கு வேண்டிய அளவு அகலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

    பிறகு Widget 'ஐ சேமித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் வலைபதிவில் HTML Code அழகான பெட்டிக்குள் தோன்றும்.

    நன்றி.
    Share:

    Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன?


    Front end Languages  
    • Html
    • Java Script
    • Css
    • etc,.
    Back end Languages
    • Php 
    • Java 
    • C
    • etc,.
     Front end க்கும் Back end க்கும் என்ன வித்தியாசம்?

         Front end Languages
      
              நம் வலைதளத்தின் பக்கங்களை பல வண்ணங்களில் மற்றும் பல வகையான கோணங்களில் வடிவமைப்பதற்க்காக பயன்படுத்துகிறோம்.  இவைகளை நாம் திரையில் நேரடியாக கண் முன்னே காண்கிறோம் அதனால் இதற்க்கு Front end Language என்று பெயர்.


        Back end Languages

             உதாரணத்திற்கு நம் வலைதளத்தில் Login Page (Login page Front end Language ஐ கொண்டு உருவாக்கப்பட்டது) இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதில் நமது பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து Login பொத்தானை சொடுக்கியவுடன் (Database ல்) உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் சரியாக இருக்கிறதா இல்லையா என சரி பார்த்து, சரியாக இருந்தால் உங்களை மேலே தொடர அனுமதிக்கும்.  சரியாக  இல்லை என்றால் உங்களை மேலே தொடர அனுமதிக்காது.   இது போல் நம் திரைக்கு பின்னே வேலையை செய்வது  நமக்கு பதில் தருவது Back end Language ஆகும்.

    Share:

    கரப்ட் ஆன யுஎஸ்பி டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீட்பது எப்படி?

    கோப்புகள்:

    Share:
    Mohamed Sithick R. Powered by Blogger.

    Search This Blog

    Translate

    Total Pageviews

    Popular Posts

    Contact Form

    Name

    Email *

    Message *

    Followers

    SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)

    Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof

    News

    Food

    Sports

    Technology

    Technology

    Featured

    Translate

    [recent]

    Blog Archive

    Recent Posts

    Pages