சென்னை: வீட்டில் இருந்தபடியே ஆதார் எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைக்க சரியான வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு 2018 பிப்ரவரி 6ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று, ஆதார் எண் மற்றும் மொபைலுடன் செல்ல வேண்டும்.
இது வாடிக்கையாளர், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக வேலையாகும். இதனை எளிமைப்படுத்தும் வகையில், கணினி மூலம் செல்போன் எண்ணை ஆதார் எண்ணை இணைக்கலாம்.
இதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை இங்கே காணலாம். முதன்மையான இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று) தங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இரண்டு) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஐவிஆர் குரல் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
இணையதளம் மூலம் செல்போன் எண் - ஆதார் எண் இணைப்பிற்கு வழிகள்:
1) சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவன இணையதளத்துக்குச் சென்று, உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யவும்.
2) உங்கள் செல்போனுக்கு ஓடிபி(ஒருமுறை வரும் பாஸ்வேர்ட்) அனுப்பி வைக்கப்படும். இதை இணையதளத்தில் பதிவு செய்யவும்.
3) உங்கள் ஆதார் எண்ணுக்கான தகவல்களை சரியாக பதிவு செய்யவும்.
4) அப்போது UIDAI நிறுவனத்திடம், நீங்கள் பதிவிட்ட ஆதார் எண் குறித்த தகவல்களை, தொலைத்தொடர்பு நிறுவனம் கேட்டுப் பெறும்.
5) உங்கள் செல்போனுக்கு UIDAI நிறுவனத்திடம் இருந்து, ஓடிபி(ஒருமுறை வரும் பாஸ்வேர்ட்) வரும்.
6) தற்போது ஆதார் எண் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வரும். அவற்றை சரிபார்த்த பின், விதிமுறைகளுக்கு(Terms & Conditions) ஒப்புதல் தெரிவிக்கவும். செல்போனுக்கு வந்த ஓடிபியை பதிவு செய்யவும்.
7) உங்கள் ஆதார் எண் குறித்த தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனம் உறுதி செய்து ஏற்றுக் கொள்ளும்.
இதேபோன்று, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஐவிஆர் குரல் பதிவு மூலமும், செல்போன் எண் - ஆதார் எண்ணை இணைக்கலாம்.
No comments:
Post a Comment