நாம் தினமும் தேடுபொறிகளை உபயோகிக்கிறோம். உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை தேடுகிறோம். சொந்தமாக நமக்காக நம் பெயரில் ஒரு தேடுபொறி இருந்தால் எப்படி இருக்கும். நமக்கே நமக்காக நமக்கு பிடித்த வடிவில் தேடுபொறிகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
முதலில் Shiny Search என்ற தளத்திற்கு செல்லுங்கள் பிறகு
Your Name என்ற இடத்தில் உங்களுடைய தேடுபொறியின் தலைப்பை கொடுங்கள்.
Click to select style... என்ற இடத்தில் உங்கள் தேடுபொறிக்கான பின்னணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இப்போது உங்களுக்கான தேடுபொறி தயாராகிவிட்டது.
நான் உருவாக்கிய தேடுபொறி கீழே உள்ளது படத்தில் உள்ளது.
இப்போது உலவியின் Address Bar 'ல் உள்ள URL ( example : http://www.shinysearch.com/myhome.php?theme=nycbridge<ext=I-Kadai )' ஐ உங்களுக்கு வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி...
No comments:
Post a Comment