டெல்லி: இந்தியாவின் இணையதளங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்த சீன ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இணையதள ஹேக் செய்யும் குழுவினர், உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக, திட்டமிட்டு தாக்குதலை நடத்துகின்றனர்.
இவர்களில் வலிமைமிக்க குழுவினராக சீனர்கள் திகழ்கின்றனர். இந்நிலையில் சீனாவின் ஏபிடி எனப்படும் ஹேக்கர்கள், பல்வேறு நாடுகளின் மீது சைபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை குறிவைத்து, வரும் 2018ஆம் ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்-ஐ தெரிவித்துள்ளது.
இந்த திட்டமிடலில் இந்தியா, ஜப்பான், வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளடங்கும். ஏபிடி ஹேக்கர்கள் எங்கு, எதற்காக தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.
இவர்களின் தாக்குதல்கள் பொதுவாக தேர்தல் தேதிகள் முன்னர் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
No comments:
Post a Comment