உலகிலேயே முதல் முறையாக ட்விட்டரை பயன்படுத்துவதற்கான ஏ.ஆர். மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented reality) என்ற தொழில்நுட்பம் நிஜ உலகில் மெய்நிகர் உருவங்களை இடம்பெறச் செய்யும் வசதியை அளிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு சில விளையாட்டுகள் கிடைக்கின்றன.
இந்நிலையில், ஏ.ஆர். தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் அப்ளிகேஷனாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கையாள்வதற்கான ட்வீட்ரியாலிட்டி (TweetReality) என்ற அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது.
ஆனால், இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் மொபைல்கள் மற்றும் ஐபாட்களில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான அப்ளிகேஷன் இன்னும் வெளிவரவில்லை.
No comments:
Post a Comment