நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம். அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள்
வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும். சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம்.
கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும்.
முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Add a Gadget ==> HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
<textarea name="textarea" cols="40" rows="4" wrap="VIRTUAL">=====your
code=====</textarea>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள்.
பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்.
நீலே வண்ணத்தில் உள்ள rows="4" என்பதுதான் பெட்டியின் அகலம் உங்களுக்கு வேண்டிய அளவு அகலத்தை அமைத்துக் கொள்ளலாம்.
பிறகு Widget 'ஐ சேமித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் வலைபதிவில் HTML Code அழகான பெட்டிக்குள் தோன்றும்.
நன்றி.
No comments:
Post a Comment