All Technology’s Available Here

சாம்சங், ஆப்பிளை அசரவிடும் நோக்கியா 9: வெறும் டூயல் கேம் இல்ல, அதுக்கும் மேலே.!


நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனமானது அடுத்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துமென்றும் அந்த அறிமுக நிகழ்வானது சீனாவில் நடைபெறுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது


அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது 


முன்னர் வெளியான தகவலில் பெரும்பாலும் நோக்கியா 6 (2018) மாடலின் அம்சங்கள் தான் அதிகம் பேசப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள டிஇஎன்ஏஏ பட்டியலானது நோக்கியா 9 ஸ்மார்ட்போனை பற்றிய அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது.

ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு


ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு


நோக்கியா 5-ல் காணப்பட்ட நோக்கியா கேமிரா பயன்பாடானது நோக்கியா 9-ன் ஒரு பிரதான அம்சமாகிறது. அதாவது நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஒரு புதிய வகை இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறலாம். அந்த கேமரா கூட்டணியானது ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு வைட்-ஆங்கிள் லென்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ்


டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ பீட்டா உருவாக்கத்தின் கீழ் தயாரான நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் கேமரா பயன்பாடான வி8.0200.20, அதன் மறைதிரையை விலக்கி கொண்டதின் கீழ் அதன் 2எக்ஸ் ஜூம் வரையிலான டெலிபோட்டோ லென்ஸ் ஆதரவு மற்றும் வைட்-ஆங்கிள் லென்ஸ் சார்ந்த விவரங்கள் வெளிப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு


ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு


கேமராவின் லென்ஸ்கள் மட்டுமின்றி சில கூடுதலான கேமரா அம்சங்கள் சார்ந்த விவரங்களும் வெளிப்பட்டுள்ளன. அதன்கீழ் பயனர்கள் ஷட்டர் வேகத்தை 1எஸ் மற்றும் 1 / 500எஸ் ஆகியவைகளுக்கு இடையில் சரிசெய்ய முடியும் மற்றும் ஐஎஸ்ஓ-வை 100 முதல் 2000 வரை தேர்வு செய்யலாம்.

வெவ்வேறு பீல்ட் ஆப் வியூ 


இதன்கீழ், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட ஆர்ஜிபி/மோனோக்ரோம் அம்சமானது கைவிடப்படுமென்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆக, இக்கருவியை இரண்டு வெவ்வேறு பீல்ட் ஆப் வியூ மற்றும் ஸூம் திறன்களைக் கொண்ட இரண்டு ஆர்ஜிபி சென்சார்கள் இடம்பெறலாம்.

3சி சான்றிதழ்


3சி சான்றிதழ் 


நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) ஆகிய கருவிகள் மிக சமீபத்தில் 3சி எனப்படும் ஒரு சீன சான்றிதழ் ஆணையத்தில் காணப்பட்டது. எந்தவொரு அம்சங்களையும் வெளிப்படுத்தாத 3சி சான்றிதழ் அறிக்கையானது நோக்கியா 9 ஸ்மார்ட்போனை மாடல் எண் டிஏ -1042 என்ற பெயரிலும், நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனை டிஏ-1054 என்ற பெயரிலும் மட்டுமே காட்டியது.

இரண்டு சேமிப்பு மாதிரி 


3சி சான்றிதழ் மூலம் அறியப்பட்ட ஒரே விடயம் என்னவென்றால் நோக்கியா 9 ஆனது, டிஏ-1005 மற்றும் டிஏ-1009 ஆகிய இரண்டு மாடல் எண்களில் காணப்பட்டுள்ளதால் அக்கருவி மொத்தம் இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பு மொழி


வடிவமைப்பு மொழி 


இந்த மாத தொடக்கத்தில், நோக்கியா 6 (2018) ஆனது சீனாவில் டிஇஎன்ஏஏ சான்றிதழைப் பெற்றதென்பதும், அது டிஏ-1054 என்கிற பொருத்தமான மாதிரி எண்ணின் கீழ் காணப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது. சில ஆரம்ப வதந்திகளின் இந்த ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியா 7-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றும் மற்றும் 18: 9 என்கிற டிஸ்பிளே அளவு கொண்டிருக்கும்.


4 ஜிபி ரேம்


4 ஜிபி ரேம் 


இதர லீக்ஸ் அம்சங்களை பொறுத்தமட்டில், நோக்கியா 6 (2018) ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க நினைவகம் மற்றும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு ஆகியவைகளை கொண்டு நிறுவனத்தின் பாக்கி ஐகானிக் அம்சங்களுடன் இணைக்கப்பட்டுருக்கும்.


ஜனவரி 19-ஆம் தேதி


ஜனவரி 19-ஆம் தேதி 


சீனாவில் வருகிற ஜனவரி 19-ஆம் தேதியன்று நடக்கு மொரு நிகழ்வொன்றில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிவிப்பு. லீக்ஸ் போன்ற பல சுவாரசியமான அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.
Share:

No comments:

Post a Comment

Mohamed Sithick R. Powered by Blogger.

Search This Blog

Translate

Total Pageviews

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Followers

SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)

Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof

News

Food

Sports

Technology

Technology

Featured

Translate

[recent]

Blog Archive

Recent Posts

Pages