குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 845 (Snapdragon 845) பிராசசரின் சிறப்பு அம்சங்கள்
ஸ்னாப்டிராகன் 845 பிராசசரில் இருக்கும் அட்ரெனோ 630 கிராபிக்ஸ் 30 சதவீதம் வேகமாக செயல்படக்கூடியது. இதனால் ஒட்டுமொத்த பிராசசர் வேகமும் இதனால் அதிகமாகும்.
ஸ்மார்டபோன் கேமராக்களில் உள்ள ஹெச்.டி.ஆர். மோட் பயன்பாடு மேலும் துல்லியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக வீடியோ எடுக்கும் போது உயர்தர வீடியோ கிடைக்க ஸ்னாப்டிராகன் 845 தன் வேலையைக் காட்டும்.
ரூம் ஸ்கேல் வி.ஆர். (Room-Scale VR) கொண்ட இதன் மூலம் வெர்சுவல் ரியாலிட்டி அனுபவம் சிறப்பானதாக இருக்கும். மேலும் மைக்ரோசாப்டின் ஹோலோலென்ஸ் போன்ற ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடிகளுடன் இணைந்து செயல்படும் திறன் படைத்தது.
வயர்லெஸ் இணைப்புகளை 20 சதவீதம் கூடுதல் வேகமாகவும் தடை இல்லாமலும் அளிக்க முடியும். குறிப்பாக, ஒரே வைஃபை நெட்வொர்க்கில் அதிகமானவர்கள் இணைந்திருக்கும் போது ஏற்படும் திடீர் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னைக்கான வாய்ப்பு குறைவு.
செக்யூர் பிராசசிங் யூனிட் (Secure Processing Unit) இதன் பாதுகாப்புக்கு வலு சேர்க்கிறது.
No comments:
Post a Comment