குறைந்த அளவு RAM கொண்ட மொபைல் போன்களுக்கான கூகுள் பேப் கோ அப்ளிகேஷனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 1GB அல்லது அதற்கும் குறைவாக RAM இருக்கும். அப்படிப்பட்ட மொபைல்களை பயன்படுத்துவர்களும் கூகுள் அப்ளிகேஷன்களை தடையின்றி பயன்படுத்த வழி வகுக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.
முதலில் இந்த மொபைல்களில் இயங்குதளம் ஆக்கிரமித்துள்ள மெமரியை குறைக்க ஆண்ட்ராய்ட் கோ என்ற புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
பின்னர், கூகுள் கோ என்ற கூகுள் சர்ச் இன்ஜின் அப்ளிகேஷனையும் ஃபைல் கோ என்ற ஃபைல் மேனேஜர் மற்றும் ஃபைல் ஷேரிங் அப்ளிகேஷனையும் கூகுள் தந்திருக்கிறது.
இந்த வரிசையில் கூகுள் மேப் பயன்பாட்டை பரவலாக்கும் நோக்கில் கூகுள் மேப்ஸ் கோ (Google Maps Go) என்ற கூகுள் மேப்பின் லைட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இது 1GB அல்லது அதற்கும் குறைவான RAM கொண்ட மொபைல்களுக்கு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.
விரைவில் ஜிமெயில் கோ (Gmail Go), அசிஸ்டெண்ட் கோ (Assistant Go) ஆகிய அப்ளிகேஷன்களும் வர உள்ளன.
No comments:
Post a Comment