இன்று அதிகமான ஆவணங்கள் PDF வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றது.
இவ்வாறு PDF வடிவில் உருவாக்கப்படும் ஆவணங்களை எமக்குத் தேவையான ஆவன வடிவங்களுக்கும் அல்லது வேறு வடிவங்களில் இருக்கக் கூடிய ஆவணங்களை PDF வடிவத்திற்கும் மாற்றிக்கொள்ள ஏராளமான மென்பொருள்கள் மற்றும் இணையதளங்கள் எமக்கு துணை புரிகின்றன.
அந்த வகையில் மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் பல்வேறு இணையதளங்களையும் மென்பொருள்களையும் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
இதனடிப்படையில் Icecream PDF Converter எனும் மென்பொருளும் எமது PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்காக ஏராளமான வசதிகளை தருகின்றது.
இதனடிப்படையில் Icecream PDF Converter எனும் மென்பொருளும் எமது PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்காக ஏராளமான வசதிகளை தருகின்றது.
இதில் இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புகள் உள்ளன. இதன் இலவச பதிப்பில் வரையறுக்கப்பட்ட வசதிகளையே பெற முடிகின்றது என்றாலும் இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பின் மூலம் வரையரற்ற இலவச பதிப்பை விட மேலதிக வசதிகளை பெற முடியும்.
இதன் இலவச பதிப்பில் ஆகக் கூடியது 10 பக்கங்களை கொண்ட PDF ஆவணங்களையே ஏனைய ஆவன வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் ஏனைய வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை PDF வடிவிற்கு மாற்றும் போது ஆகக் கூடியது 5 பக்கங்களையே கொண்டிருத்தல் வேண்டும். எனினும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் இது போன்ற வரையறைகள் இல்லை.
Icecream PDF Converter Pro பதிப்பின் மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.
DOC, DOCX, XLSX, ODS, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML போன்ற எந்த விடிவில் அமைந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு PDF ஆவணத்தையும் JPG, BMP, DOC, ODT, HTML, TIFF, PNG, GIF, EPS,WMF, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை ஒரே PDF ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் PDF ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் கடவுச்சொற்களை இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
எந்த ஒரு PDF ஆவணத்தையும் JPG, BMP, DOC, ODT, HTML, TIFF, PNG, GIF, EPS,WMF, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை ஒரே PDF ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் PDF ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் கடவுச்சொற்களை இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த Icecream PDF Converter Pro எனும் மென்பொருளானது சுமார் 20 அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருளாகும்.
இருப்பினும் chip1507icecream@chip.cz எனும் முகவரிக்கு ஒரு வெற்று மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம் Icecream PDF Converter Pro மற்றும் Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருள்களுக்கான இலவச Licence Key ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருளானது வெவ்வேறுபட்ட PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கும் ஒரு நீண்ட PDF ஆவணத்தை வெவ்வேறாக பிரித்துக்கொள்ளவும் உதவுகின்றது. மேலும் நீங்கள் ஒன்றிணைக்கும் PDF ஆவணத்திற்கு கடவுச்சொல் இடுவதன் மூலம் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
இதனை பின்வரும் இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
Icecream PDF Converter Pro (118MB)
Icecream PDF Split & Merge Pro (8.5MB)
மேலே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் இருந்து இலவச பதிப்பை தரவிறக்கி கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளின் Settings பகுதிக்கு சென்று நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்ட Licence Key ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை முழுமையான (Pro) பதிப்புக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment