மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதை எளிமையாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் மூன்று எளிய வழிகளை அளிப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தன.
இதன்படி, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண் (OTP)மூலம் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
எந்த மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அதிலிருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் அளிக்கும் ஆதார் இணைப்பு தானியங்கி எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும். இந்த காலில் குரல் வழிகாட்டலை பின்பற்றி ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். உடனே, அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு ரகசிய குறியீடு எண் (OTP) கிடைக்கும். இதை சரியாக டைப் செய்து சரிபார்த்து விட்டால் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.
இதுவரை 50 கோடி மொபைல் எண்கள் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment