டெல்லி: ஆந்திர பிரதேசம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை வடகிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் கிழக்கு, உத்திரபிரதேசம் மேற்கு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 தொலைத்தொடர்புக்கு உட்பட்ட பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4G டேட்டா சேவையினை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கொல்கத்தா பகுதிகளில் மட்டுமே அதிவேக 4G சேவையினை வழங்குகிறது. இந்த வரிசையில் வோடஃபோன் நிறுவனம் சென்னையில் மட்டுமே அதிவேக 4G சேவையினை வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனம் அசாம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய 3 பகுதிகளில் அதிவேக 4G சேவையினை வழங்குகிறது.
TRAI அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி இந்திய அளவில் மொத்தம் உள்ள 23 இடங்களில் ஜியோ நிறுவனம் 17 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் 2 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 8 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 9 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. வோடஃபோன் நிறுவனம் 1 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 8 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 4 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 3 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 6 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 5 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 6 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது.
மாத சராசரி டேட்டா வேகம் அடிப்படையில் ஜியோ நிறுவனம் 21.9 mbps, வோடஃபோன் நிறுவனம் 8.7 mbps, ஐடியா செல்லுலார் நிறுவனம் 8.6 mbps, ஏர்டெல் நிறுவனம் 7.5 mbps பதிவு செய்துள்ளது
இணைய தரவிறக்க வேகம் அடிப்படையில் ஜியோ மும்பையில் 40.4 mbps பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிவேக சேவை கொல்கத்தாவில் 11 mbps பதிவாகியுள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் அதிவேக சேவை சென்னையில் 14.6 mbps பதிவாகியுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் அதிவேக சேவை அசாமில் 15.6 mbps பதிவாகியுள்ளது.
TRAI அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி இந்திய அளவில் மொத்தம் உள்ள 23 இடங்களில் ஜியோ நிறுவனம் 17 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் 2 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 8 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 9 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. வோடஃபோன் நிறுவனம் 1 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 8 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 4 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 3 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 6 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 5 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 6 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது.
மாத சராசரி டேட்டா வேகம் அடிப்படையில் ஜியோ நிறுவனம் 21.9 mbps, வோடஃபோன் நிறுவனம் 8.7 mbps, ஐடியா செல்லுலார் நிறுவனம் 8.6 mbps, ஏர்டெல் நிறுவனம் 7.5 mbps பதிவு செய்துள்ளது
No comments:
Post a Comment