All Technology’s Available Here

இந்திய இணையதளங்களை குறிவைக்க தயாரான சீன ஹேக்கர்கள்; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்!



டெல்லி: இந்தியாவின் இணையதளங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்த சீன ஹேக்கர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இணையதள ஹேக் செய்யும் குழுவினர், உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக, திட்டமிட்டு தாக்குதலை நடத்துகின்றனர்.

Tamil_News_large_1914168

இவர்களில் வலிமைமிக்க குழுவினராக சீனர்கள் திகழ்கின்றனர். இந்நிலையில் சீனாவின் ஏபிடி எனப்படும் ஹேக்கர்கள், பல்வேறு நாடுகளின் மீது சைபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை குறிவைத்து, வரும் 2018ஆம் ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்-ஐ தெரிவித்துள்ளது.

இந்த திட்டமிடலில் இந்தியா, ஜப்பான், வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளடங்கும். ஏபிடி ஹேக்கர்கள் எங்கு, எதற்காக தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.

இவர்களின் தாக்குதல்கள் பொதுவாக தேர்தல் தேதிகள் முன்னர் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
Share:

உலகின் முதல் ஏ.ஆர். அப்ளிகேஷன்: ட்விட்டர் அசத்தல்



உலகிலேயே முதல் முறையாக ட்விட்டரை பயன்படுத்துவதற்கான ஏ.ஆர். மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented reality) என்ற தொழில்நுட்பம் நிஜ உலகில் மெய்நிகர் உருவங்களை இடம்பெறச் செய்யும் வசதியை அளிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு சில விளையாட்டுகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், ஏ.ஆர். தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் அப்ளிகேஷனாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கையாள்வதற்கான ட்வீட்ரியாலிட்டி (TweetReality) என்ற அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது.

giphy (1)

ஆனால், இந்த அப்ளிகேஷன் தற்போது ஆப்பிள் மொபைல்கள் மற்றும் ஐபாட்களில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான அப்ளிகேஷன் இன்னும் வெளிவரவில்லை.
Share:

வாங்க ஆதார் எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைக்கலாம்; அதுவும் வீட்டில் இருந்தபடியே!



சென்னை: வீட்டில் இருந்தபடியே ஆதார் எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைக்க சரியான வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு 2018 பிப்ரவரி 6ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று, ஆதார் எண் மற்றும் மொபைலுடன் செல்ல வேண்டும்.

இது வாடிக்கையாளர், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக வேலையாகும். இதனை எளிமைப்படுத்தும் வகையில், கணினி மூலம் செல்போன் எண்ணை ஆதார் எண்ணை இணைக்கலாம்.


1c201f1ec79008eb9cfc590df2664aad50b5f836
இதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை இங்கே காணலாம். முதன்மையான இரண்டு வழிகள் உள்ளன.

ஒன்று) தங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இரண்டு) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஐவிஆர் குரல் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இணையதளம் மூலம் செல்போன் எண் - ஆதார் எண் இணைப்பிற்கு வழிகள்:

1) சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவன இணையதளத்துக்குச் சென்று, உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யவும்.

2) உங்கள் செல்போனுக்கு ஓடிபி(ஒருமுறை வரும் பாஸ்வேர்ட்) அனுப்பி வைக்கப்படும். இதை இணையதளத்தில் பதிவு செய்யவும்.

3) உங்கள் ஆதார் எண்ணுக்கான தகவல்களை சரியாக பதிவு செய்யவும்.

4) அப்போது UIDAI நிறுவனத்திடம், நீங்கள் பதிவிட்ட ஆதார் எண் குறித்த தகவல்களை, தொலைத்தொடர்பு நிறுவனம் கேட்டுப் பெறும்.

5) உங்கள் செல்போனுக்கு UIDAI நிறுவனத்திடம் இருந்து, ஓடிபி(ஒருமுறை வரும் பாஸ்வேர்ட்) வரும்.

6) தற்போது ஆதார் எண் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வரும். அவற்றை சரிபார்த்த பின், விதிமுறைகளுக்கு(Terms & Conditions) ஒப்புதல் தெரிவிக்கவும். செல்போனுக்கு வந்த ஓடிபியை பதிவு செய்யவும்.

7) உங்கள் ஆதார் எண் குறித்த தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனம் உறுதி செய்து ஏற்றுக் கொள்ளும்.

இதேபோன்று, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஐவிஆர் குரல் பதிவு மூலமும், செல்போன் எண் - ஆதார் எண்ணை இணைக்கலாம். 
Share:

வாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்




487950859-WhatsApp_6



வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள குரூப் சேட்டிங்கிலும் தனியாக ஒரு நபரிடம் மட்டும் பேசும் வசதி கிடைக்க உள்ளது.

வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேஷன் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் குரூப் சேட்டில் ஒரு நபருக்கு மட்டும் தெரியும் வகையில் மெசேஜ் அனுப்ப உதவும் Reply Privately என்ற புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதே போல PIP (Picture in Picture) என்ற வசதியும் கிடைக்க உள்ளது. இதன் படி வாட்ஸ்அப்பில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே மெசேஜ் மூலமும் அரட்டை அடிக்கலாம்.

Share:

ஸிப்ரானிக்ஸ் அறிமுகம் செய்யும் ஹெட்ஃபோன்கள் / இயர்ஃபோன்களுக்கான வயர்லெஸ் தொகுப்பு, ZEB-BE380T



ZEB-BE380T தொகுப்பில் காதுக்குள் பொருந்தக்கூடிய இயர்ஃபோன்கள் இருப்பதால், எந்தவகை இயர்ஃபோனையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் தகவல் தொழில்நுட்ப துணை சாதனங்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்களை வழங்குவதில், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஸிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் விளங்குகிறது. தற்போது ஸிப்ரானிக்ஸ் ZEB-BE380T என்ற இயன்ஃபோன்களுடன் கூடிய புளூடூத் தொகுப்பை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த ZEB-BE380T புளூடூத் தொகுப்பானது பல இயர்ஃபோன்களைக் கொண்டிருப்பதால், எந்தவகை இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனையும் இது வயர்லெஸ்ஸாக மாற்றும். வயர்லெஸ் ஆடியோ மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு, இந்த தயாரிப்பு ஓர் நீண்ட கால வரப்பிரசாதம். இந்த புளூடூத் மாடலானது 3.5mm ஜாக் உடன் வருவதால், இந்த அழகிய எடை குறைந்த தொகுப்புடன் உங்கள் இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனை இணைத்தால் போதும், அவை முழுமையாக வயர்லெஸ்ஸாக மாறிவிடும்.

இந்த அழகிய புளூடூத் தொகுப்பில் மீடியா கட்டுப்பாட்டு பட்டன்கள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிதாக ஆடியோவை கட்டுப்படுத்தலாம். அத்துடன், MP3 பிளேபேக் வசதிக்காக மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது. இந்த தொகுப்புடன் வந்துள்ள இயர்ஃபோன்கள், உயர் தரத்துடன் கூடிய காதுக்குள் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், இரைச்ச்சல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, தரமான இசையை ரசிக்க முடியும். அத்துடன், இதில் வசதியான இயர் கப்புகள் மற்றும் மெட்டாலிக் வடிவமைப்பில் பின்புற அமைப்பு இருப்பதால், அழகுடன் காட்சியளிக்கிறது.

இந்த தொகுப்பானது கிளிப் வடிவமைப்பில் வருவதால், எந்த வகை ஆடையானாலும் எளிதாக கிளிப் போட்டு, செல்லுமிடமெல்லாம் இசையை ரசிக்கலாம். குறிப்பாக, ஓட்டப்பயிற்சி, தடகளப் பயிற்சி செய்பவர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் இந்த தொகுப்பை மாட்டிக் கொண்ட பின் அழைப்புகள் வந்தால் தங்கள் ஃபோன்களை இழுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதே நேரம் பாடல்களையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பை அறிமுகப்படுத்திய, ஸிப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறும்போது, ”புளூடூத் இயர்ஃபோன்கள் என்றாலே அது ஸிப்ரானிக்ஸ் தான்.  ஸிப்ரானிக்ஸின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, ZEB-BE380T இணைந்துள்ளது. புளூடூத் இயர்ஃபோன்களின் சந்தையில் கால்பதித்துள்ள இந்த தயாரிப்பானது, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ’ஸ்மார்ட்’ வசதிகளைக் கொண்டுள்ளது. இசைப்பிரியர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இசையை துல்லியமாக ரசிக்கலாம்” என்றார்.
 
இந்த தொகுப்பில் உள்ள புளூடூத் அலைவரிசை, 10 மீட்டர் சுற்றளவுக்கு தடையில்லாமல் இயங்கக்கூடியது. அத்துடன் இதில் உள்ள கிளிப் வடிவமைப்பு, மிக எளிதாக புளூடூத் இணைப்பை ஏற்படுத்தி, தடையில்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ இசை அனுபவத்தை அளிக்கிறது. இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை இணைந்த அழகிய வடிவத்தில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது. 
Share:

4ஜி VoLTE ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன்



பானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.6,290 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பிராண்டு கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக நாடு முழுவதும் கிடைக்கும். 4ஜி VoLTE ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் பிளாக் வண்ண வகைகளில் மட்டுமே கிடைக்கும்.

டூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.1GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737M ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.4 அபெர்ச்சர் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 2210mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 144 கிராம் எடையுடையது.

பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

டூயல் சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
எடை (கி): 144 
பேட்டரி திறன் (mAh): 2210
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: ஷாம்பெயின் கோல்ட், பிளாக்

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.0
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 480x854 பிக்சல்கள்

ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.1GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737M
ரேம்: 1ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 16பி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 32

கேமரா

பின்புற கேமரா: 8 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட்

இணைப்பு

Wi-Fi
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4.0
USB OTG
3.5மிமீ ஆடியோ ஜாக்
FM ரேடியோ
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
மைக்ரோ-யூஎஸ்பி

சென்சார்கள்:

ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
Share:

ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் BT கனெக்ட் வயர்லெஸ் மாட்யூல்





x

Image result for bt connect wireless module

இந்த BT மாட்யூல் 3.5mm இன்புட் உள்ள எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது. ஜிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிட். நிறுவனம் IT உதிரி பாகங்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. ஜிப்ரானிக்ஸ் நிறுவனம், புதிய வயர்லெஸ் மாட்யூல் BT கனெக்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ளூடூத் மாட்யூல், 3.5mm இன்புட் கொண்ட எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது. பின்வரும் சாதனங்களை கன்வெர்ட் செய்து ஸ்மார்ட்ஃபோன், டேப்ளட் அல்லது கணினியிலிருந்து வயர் இல்லாமல் இசையைக் கேட்கலாம். ● 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஸ்பீக்கர்கள்.● 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஹோம் தியேட்டர்.● ஆக்ஸ் இன்புட் கொண்ட கார் ஸ்டீரியோ.● ஹெட்போன்கள்.  BT கனெக்ட் மிகவும் லேசான சிறிய மாடலாகும். வயர் இல்லாமல் உங்கள் சாதனத்துடன் இணைக்கவும், தொடர்ச்சியாக இசையைக் கேட்டு மகிழவும் இந்த BT கனெக்ட் உதவும். ஈசி பிளக் மற்றும் பிளே அம்சத்துடன், ஆப்பரேட் செய்ய எளிதானது. இந்த சாதனத்தில் பில்ட்-இன் மைக் இருப்பதால், இணைக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோனிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்கமுடியும். இந்த நேர்த்தியான மாட்யூல், ஆடியோ அவுட்புட்டிற்கான 3.5mm ஜேக்குடன் வருகிறது. வால்யூம் கண்ட்ரோல் பட்டன்கள், MP3 பிளேபேக்கிற்கான MicroSD ஸ்லாட், மீடியா கண்ட்ரோல் பட்டன் மற்றும் ஆன்/ஆஃப் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. மாட்யூலானது லேசான கிளிப் வடிவத்தில் இருக்கும், எனவே எந்த துணியிலும் பின் செய்துகொள்ளலாம். எந்தவொரு சாதனத்திலும் இதை கனெக்ட் செய்து, அந்த சாதனத்தை முற்றிலும் வயர்லெஸ்ஸாக்கலாம். தங்களின் பொழுதுபோக்கை பகட்டாக மாற்ற விரும்புபவர்களுக்கு இந்த மாட்யூல் மிகவும் வசதியானது.
இந்த சாதனத்தை ஹோம் ஸ்பீக்கர்கள்/ஹெட்ஃபோன்கள் போன்ற ஏதாவது ஒன்றில் இணைத்து, வயர் இல்லாமல் இசைக் கேட்கும் சிறந்த அனுபவத்தைப் பெறலாம். ப்ளூடூத் மாட்யூல் வெளியீட்டின்போது, இந்திய ஜிப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி கீழ்கண்டவாறு கூறினார்: 'வயர்லெஸ் தயாரிப்புகள் என்றாலே, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஜிப்ரானிக்ஸ் தான் முன்னணியில் இருக்கிறது! வயர்லெஸ் சந்தையில் மீண்டும் ஒரு முறை எங்கள் அடித்தளத்தை வலுப்படுத்த, BT கனெக்ட் ஸ்மார்ட் போர்டபிள் வயர்லெஸ் மாட்யூலை வழங்குகிறோம். அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு 'ஸ்மார்ட்' என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறோம். வயர்லெஸ் அம்சத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் அம்சங்களின் செயல்பாட்டு வடிவத்தை மனதில் வைத்து, எந்த இடத்திலும் எந்தவொரு சாதனத்திலும் இணைக்கும்படி வடிவமைத்துள்ளோம்.'இந்த மாட்யூலின் ப்ளூடூத் வரம்பானது எந்தவித குறுக்கீடுமின்றி 10 மீட்டர்கள் வரை இருக்கும். கிளிப் டிசைன் இருப்பதால் கைகளில் வைத்துக்கொண்டு சிரமப்படத் தேவையில்லை. எளிதாக உங்கள் சாதனத்துடன் கனெக்ட் செய்து தடையில்லா இசை அனுபவத்தைப் பெற்று மகிழலாம். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணக் கலவையில் கிடைக்கிறது. இந்த ப்ளூடூத் மாட்யூல் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Share:

ரூ.23,999 விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன்


Image result for moto x4

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன், சில காரணங்களால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,999 விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 424ppi பிக்சல் அடர்த்தி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.20 இன்ச் முழு எச்டி LTPS ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 2.2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 630 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், 1.4 மைக்ரான் பிக்சல்ஸ், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 148.35x73.40x7.99mm நடவடிக்கைகள் மற்றும் 163 கிராம் எடையுடையது.

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

ஒற்றை சிம்

பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
நடவடிக்கைகள் (mm): 148.35x73.40x7.99
எடை (கி): 163
பேட்டரி திறன் (mAh): 3000
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.20
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 1080x1920 பிக்சல்கள்
பிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 424

ஹார்டுவேர்

ப்ராசசர்: 2.2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 630
ரேம்: 3ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32பி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 200

கேமரா


பின்புற கேமரா: 12 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 16 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகாட்

இணைப்பு


Wi-Fi 802.11 a/b/g/n/ac
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 5.0
NFC
ஆடியோ ஜாக்
FM ரேடியோ
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
மைக்ரோ-யூஎஸ்பி

சென்சார்கள்:


ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
Share:

ஜியோ 17 இடங்களில் அதிவேக 4G டேட்டா அறிமுகம் : ஏர்டெல் 2 இடங்களில் மட்டுமே!

டெல்லி: ஆந்திர பிரதேசம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை வடகிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் கிழக்கு, உத்திரபிரதேசம் மேற்கு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 தொலைத்தொடர்புக்கு உட்பட்ட பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4G டேட்டா சேவையினை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கொல்கத்தா பகுதிகளில் மட்டுமே அதிவேக 4G சேவையினை வழங்குகிறது. இந்த வரிசையில் வோடஃபோன் நிறுவனம் சென்னையில் மட்டுமே அதிவேக 4G சேவையினை வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனம் அசாம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய 3 பகுதிகளில் அதிவேக 4G சேவையினை வழங்குகிறது.


இணைய தரவிறக்க வேகம் அடிப்படையில் ஜியோ மும்பையில் 40.4 mbps பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிவேக சேவை கொல்கத்தாவில் 11 mbps பதிவாகியுள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் அதிவேக சேவை சென்னையில் 14.6 mbps பதிவாகியுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் அதிவேக சேவை அசாமில் 15.6 mbps பதிவாகியுள்ளது.


TRAI அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி இந்திய அளவில் மொத்தம் உள்ள 23 இடங்களில் ஜியோ நிறுவனம் 17 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும்,  2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் 2 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 8 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 9 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 2 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. வோடஃபோன்  நிறுவனம் 1 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 4 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 8 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 4 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 3 இடங்களில் முதல்தர 4G சேவையினையும், 6 இடங்களில் இரண்டாம் தர 4G சேவையினையும், 5 இடங்களில் மூன்றாம் தர 4G சேவையினையும், 6 இடங்களில் நான்காம் தர 4G சேவையினையும் வழங்குகிறது.


மாத சராசரி டேட்டா வேகம் அடிப்படையில் ஜியோ நிறுவனம் 21.9 mbps, வோடஃபோன் நிறுவனம் 8.7 mbps, ஐடியா செல்லுலார் நிறுவனம் 8.6 mbps, ஏர்டெல் நிறுவனம் 7.5 mbps பதிவு செய்துள்ளது


Share:

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்கும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்




ஹவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் 8ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் முதல் சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் EUR 499 (சுமார் ரூ.38,000) மற்றும் GBP 449 (சுமார் ரூ.38,900) விலையிலும் கிடைக்கும். ஜனவரி 8ம் தேதி முதல் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். எனினும் இந்தியாவில் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் EMUI 8.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் 403ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080x2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.99 இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி முழுகாட்சி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 1.8GHz அக்டா கோர் ஹவாய் ஹைசிலிகான் கிரீன் 970 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் f/1.8 அபெர்ச்சர் மற்றும் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3750mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.20, NFC, இன்ஃப்ராரெட், USB OTG-C (2.0), 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 157x74.98x6.97mm நடவடிக்கைகள் மற்றும் 172 கிராம் எடையுடையது. இது அரோரா ப்ளூ, டார்க் நைட், பீச் கோல்ட், சார்ம் ரெட் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. 

ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் சிறப்புகள்:

டூயல் சிம்

பொது
வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
நடவடிக்கைகள் (mm): 157x74.98x6.97
எடை (கி): 172 
பேட்டரி திறன் (mAh): 3750
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: அரோரா ப்ளூ, டார்க் நைட், பீச் கோல்ட், சார்ம் ரெட்

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.99
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 1080x2160 பிக்சல்கள்
பிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 403

ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.8GHz அக்டா கோர் ஹைசிலிகான் கிரீன் 970
ரேம்: 4ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 256

கேமரா


பின்புற கேமரா: 16 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 13 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ஸ்கின்: EMUI 8.0

இணைப்பு


Wi-Fi 802.11 a/b/g/n/ac
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4.20
NFC
இன்ஃப்ராரெட்
USB OTG-C (2.0)
3.5மிமீ ஆடியோ ஜாக்
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
மைக்ரோ-யூஎஸ்பி

சென்சார்கள்:

காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
கைரோஸ்கோப்

Share:

சர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்!




இணையத்தில் புதிய / பழைய படங்கள் பார்ப்பது உலக அளவில் பல வீடுகளில் நடக்கும் பொழுது போக்கு நடவடிக்கை.
சில இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பொறுமையாக Stream செய்தோ அல்லது Torrent டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கம்

அதிலும், சரியான Torrent கிடைத்தாலும் அந்த பிரிண்டில் ஆடியோ நல்லா இருக்கணும். எல்லாம் சரியா இருந்தாலும் Subtitle அதே பிரிண்ட்க்கு கிடைக்கணும் என வீட்டில் இருந்தே படம் பார்க்கும் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் வரும் மக்களை துச்சமாக மதிப்பதும், பார்க்கிங் கட்டணம் , தீனி கட்டணம், இரைச்சல் இடும் ரசிகர்கள் என படத்தை பார்க்கும் ஆர்வத்தை சிதைப்பதால்., திரையரங்கை மக்கள் வெகுவாக புறக்கணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள் நல்ல ஆங்கில திரைப்படங்களை திரையிடுவதில்லை. அதிலும் இவர்கள் கொடுக்கும் தமிழ் பின்னணி வசனங்கள் ஏனோ தானோ என இருக்கின்றன.
நீங்கள் நல்ல ஆங்கில படங்களை நல்ல HD தரத்தில் பார்க்க வேண்டும் என நினைத்தால் “Popcorn Time” எனும் இந்த மென்பொருளை நிறுவி பார்க்கலாம். இந்த மென்பொருள் உலகில் உள்ள அனைத்து Torrent செர்வர்களையும் இணைத்து நீங்கள் விரும்பும் படத்தை Stream செய்தே காட்டும்.
Hollywoodஇல் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் இந்த Popcorn Time மென்பொருளை தடை செய்ய பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை.
இன்று முதல் சில தமிழ் திரைப்படங்களும் (கயல், லிங்கா, ராமானுஜம்), இந்திய திரைப்படங்கள்  Two States, PK போன்றவையும் வந்துள்ளன.
Popcorn Time போல் பல போலி மென்பொருள்களும் உலவுகின்றன ஆனால் இந்த தலத்தில் உள்ளது தான் அதிக படங்களைக் கொண்ட மென்பொருள். உங்களின் இணைய இணைப்பு 2MBPS க்கு மேல் இருந்தால் வீட்டிலேயே பல நல்ல ஆங்கிலப் படங்களை HD தரத்தில்  Subtitleஉடன் பார்க்கலாம்.
சமீபத்தில் நான் பார்த்த படங்கள்
The Interview
District 9
Elysium
In Time
Truman Show
Borat
Gravity
​Sex Tape
Delivery Man
Inside Job
Wolf of Wallstreet
​குறிப்பு: புதிய ஆங்கிலப் படங்கள் 3-4 வாரங்கள் கழித்தே இங்கே பார்வைக்கு வரும்.


Share:

​பயர்பாக்ஸ் V55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.

1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய


நான் பயர்பாக்ஸ் உலவியையே எனது கணினி மற்றும் மொபைலில் பயன்படுத்தி வருகிறேன், அனைவரையும் பயர்பாக்ஸை பயன்படுத்தவே நானும் அறிவுறுத்தி வருகிறேன். கூகள் குரோமிற்கு சிறந்த மாற்று மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) தான்.
கூகுள் நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்களின் இணைய உலவிகள் அதிக  மக்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின் மக்களின் இணைய தள பயன்பாடுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவும், தணிக்கைக்கு உட்படுத்தவும், ஒரு தொழில் நுட்பத்தை ஒரு உலவியில் பயன்படுத்துவது தொடர்பாக திடீர் விதிமுறைகள் விதித்து போட்டி நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துவது என தங்கள் உலவிகளை வைத்து அராஜகம் செய்து வருகின்றதாகவே கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் சமூகத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வருகிறது.
 கட்டற்ற & இலவச இணைய உலவியான மோசில்லா பயர்பாக்ஸ் இன்று தனது 55ம் பதிப்பை வெளியிடுகிறது. ​

WebVR Virtual Reality Support:

கணினி (டெஸ்க்டாப்) உலவியிலேயே VR  (கானல் காட்சி) வகை வீடியோக்களை பார்க்கும் வசதியை இன்று வெளியிடுகிறது. இதன் மூலம் உங்களிடம் VR கண்ணாடி இருந்தால் உங்கள் கணினியில் உள்ள புதிய  பயர்பாக்ஸ் உலவியில் VR அனுபவத்தை பெறலாம்.

Performance Updates:

ஒரே உலவியில் பல பக்கங்களை நாம் டேப்களில் ( தாவல்) நாம் பாப்போம். இவ்வாறு அதிக பக்கங்கள் இருக்கும்போது உலவியின் செயல்திறன் மெதுவாக இருக்கும். இந்த குறையை போக்க இந்த புதிய பதிப்பில் ஒரே நேரத்தில் 1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய வெறும் 15 வினாடிகளே ஆனது, ஆனால் இதற்கு முந்தைய பதிப்பில் 8 நிமிடங்கள் வரை ஆனது.
64 பிட் பதிப்பு பயர்பாக்ஸ் அதிகமாக முறை  கிராஷ் (Crash) ஆவதை தடுக்க பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கூகள்,  விக்கிபீடியா, யூ  டியூப் போன்ற தளங்களில் தேடுவதை உலவியில் இருந்தே தேடி எடுக்கும் வகையில் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
குறிப்பு: உங்கள் கணினி 64 பிட் என்றால் 64 பிட் பதிப்பையே தரவிறக்கம் செய்யவும்.



Share:

How to Make Money with Email Marketing ?



First of all what email marketing is and what it relates with. It is a way of marketing by sending emails to a subscriber or a person having an email account. This is the most popular way of marketing. By sending email to a person, it can really spread easily among the surrounding. It is a very good way to express your product and services to a common herd. One of the most commonly used tool for promotion is email marketing only. With the help of email marketing, you can easily know that particular product. It can be seen as a promotional aspect for communication or for fund raising. It is a very effective way by which new customers can be a part of it and the previous relations grow stronger. A very easy way to be a part of the global world is this only and one can easily achieve greater heights.


One of the most widely used aspects is making money from home that is simple and easy to learn.
It is good for homemakers and students who from their homes can easily make money. It includes paperwork, data entry jobs, online survey, etc. These are some of the common tool for making money from home. It provides simple steps by which you can get the money. The tools that are used are very easy. It is good for all age group to be a part of this aspect of life. Even the elder ones in the family can very easily learn it in a matter of days. Money from home is a very good sort of way to be what you want in a small span of time.
A very common way to be a part of it is by getting Ideas to make money. Ideas are necessary to make money, to be what one wants. It comes with two ways one of which is the wrong one and the other being the good path. The negative aspect is what everybody knows and is aware of it. Ideas to make money are of utter relevance and needs talent too as well. Things are not so much easy, you need some skill and talent to really achieve it. It is a matter of intelligence to make money in a small amount of time. It is not that none can have that sort of talent but who can get the ultimate price is important.
Internet is a very cool stuff where all the age group comes as a unit to make more popular amongst everybody. It really provides a platform to make money and get to be a part of such a real world. Tips on how to make money is as simple as it can get into your head. You should remember that making money needs such small things that you cannot even imagine. The basic tip that is required is common sense and ability to grow from the base. The Tips on how to make money can be seen as a global rising aspect as people do come across fraud very easily. You require proper attention not be a part of that fraud.

Share:
Mohamed Sithick R. Powered by Blogger.

Search This Blog

Translate

Total Pageviews

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Followers

SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)

Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof

News

Food

Sports

Technology

Technology

Featured

Translate

[recent]

Blog Archive

Recent Posts

Pages