All Technology’s Available Here

ஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​


ruby-847c4d5e8e43981d3690e77fe389124d நீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack).
ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள உதவும். இதனை கொண்டு ரூபி நிரலாக்க மொழியை எளிதாக கற்று கொள்ளவும், கற்பிக்கவும் முடியும். இதற்கு எந்த அடிப்படை மொழியும் தேவை இல்லை. ஹக்கெட்டி அனைத்து இயங்கு தளத்திலும் (மாக்,விண்டோஸ் மற்றும் லினக்ஸ்) இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு ஊடாடும் பயிற்சியை(Interactive Training) வழங்குகிறது. இது ஸ்க்ராட்ச்(Scartch) மற்றும் அலிஸ்(Alice) போன்ற வரைகலை(Graphical Interface) நிரலாக்க மொழிகளுடன் தொகுதிகள்(blocks) முலமும் கற்று கொள்ள இயலும். இது ஷோஸ் (Shoes) toolkitயை கொண்டு எளிதாகவும், விளையாட்டாகவும் வரைகலை முகப்பை வரைய உதவுகின்றது.
ஹக்கெட்டி ஹேக் சாளரம்
splash
இதனை கொண்டு மாணவர்கள் விரைவாகவும், எளிதாகவும் தங்கள் சொந்த பயன்பாடுகளையும் (Applications), வலைதளங்களை (Websites) உருவாக்க முடியும். மாணவர்கள் நிரலாக்க மொழியில் ஒரு வலுவான அடித்தளத்தை கொடுக்கிறது ஹேக்.
மேலும் விபரங்களுக்கு
சி. சிந்துஜா சுந்தராஜ்,
ஆசிரியர்,
கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கம்
புதுச்சேரி
Share:

FREENAS சர்வர் உருவாக்குவது எப்படி

                                                                                                                    

freenas-logo_no_bgnd200-e547889e7857020d
                                                     
உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVERஆக மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழசாகிவிடும், புதுப் புது வசதிகளும் கண்டுபிடிப்பும் தாங்க ​ இதுக்கு ​ ​காரணம்!!
LAPTOP , NOTEBOOK , ULTRABOOK ன்னு ​சந்தைல  புது ​தொழில்நுட்பம்வருகையால பல வீடுகளில் DESKTOP PC பயனற்ற பொருளாக​க்  கிடக்கிறது.
அப்படி ஒரு DESKTOP PC உங்க வீட்ல ​இருந்தாகவலை​ய விடுங்க, FREENAS என்ற புது OPERATING SYSTEM உங்க கம்ப்யூட்டர் ஐ ஒரு கணினி கட்டமைப்பு சார்த்த சேமிப்பு கருவியாக மாற்றிவிடும்.
உங்க வீட்டுல இரண்டு , மூன்று கணினிகளோ அல்லது மடிக்கணினிகளோ இருந்தால் இந்த FREENAS File Server மிகுந்த பயன்மிக்கதாக இருக்கும்.

  • பொதுவான Firewall
  • பொதுவான BitTorrent Downloader
  • அனைத்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சேமித்து வைத்தல்
  • MP3 பாடல்களை இங்கு மட்டும் வைத்து அனைவரும் கேட்டுக்கொள்ளும் வசதி
  • போன்றவை FREENASஇன்  குறிப்பிடத்தகுந்த பயன்பாடுகள் ஆகும்.

NAS உபயோகிக்க உங்கள் PCல் இருக்கவேண்டியவை:
என்ன தான் பழைய கம்ப்யூட்டரில் இயங்கும் என்றாலும் சற்று தற்காலத்திய கம்ப்யூட்டரில் இதன் சேவை முழுமையாக பெற முடியும்.FREENAS, FREEBSDஐ சார்ந்தது, ஆதலால் FREEBSDஆதரிக்கும் எல்லா HARDWAREலிலும் இது இயங்கும்.
32 BIT மற்றும் 64 BIT CPU ல் இயங்கும் இந்த FREENAS , ஆனால் 64 BIT CPU மிகவும் பொருத்தமானது, ZFS FILE SYSTEM உடன் இயங்க குறைந்தபட்சம் 8 GB RAM தேவைபடுகிறது, உங்களிடம் குறைவான RAM வசதிஅதாவது 2GB RAM இருந்தால் நீங்கள் UFS FILE SYSTEM பயன்படுத்தலாம்….
FREENASஐ CD அல்லது USB ல் நிறுவு செய்வதன் மூலம் COMPUTERன் STORAGE​ஐ ​மிச்ச​ப் படுத்திகொள்ளலாம்.
FREENAS ஐ இங்கு DOWNLOAD செய்யுங்கள்.
http://web.freenas.org/download-freenas-release.html , அதை CD அல்லது USB ல் COPY செய்து உங்கள் COMPUTER ல் BOOT செய்யுங்கள்.
FREENAS INSTALL செய்யும் முறை:
freenas1
உங்கள் COMPUTERல் FREENAS INSTALLERஐ BOOT செய்து பின்வரும் வழிமுறைகளை ஒன்றின் ஒன்று செய்துவாருங்கள்,
  • USB அல்லது CD ஐ உங்கள் COMPUTERல் சொருகுங்கள்,
  • INSTALLATION திறையில் INSTALL/UPGRADE என்று தேர்வுசெய்து, எந்த DRIVEல் சேமிக்க வேண்டும் என தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் தேர்வு செய்த DRIVE ல் FREENAS OPERATING SYSTEM சேமிக்கப்படும், INSTALLATION நிறைவடைந்தது, உங்கள் CD மற்றும் USBகு இனி வேலை இல்லை.. அவற்றை நீக்கிவிட்டு உங்கள் COMPUTER ஐ மறு தொடக்கம் செய்யுங்கள்.
freenas2
FREENAS நிறுவுதல்:
COMPUTER மறுதொடக்கம் ஆனவுLடன் கட்டுபாட்டு முனையம் திரை ​

​திறக்கும் ​, நீங்கள் இதிலிருந்தும் SETTINGS தேர்வுசெய்யலாம், அல்லது திரையின் அடியில் இருக்கும் URL ல் மற்ற COMPUTER ன் WEB BROWSER ல் இணைந்து FREENAS GRAPHICAL WEB INTERFACE ஐ பயன் படுத்தலாம்.
(இப்பொழுது நீங்கள் MONITOR உடன் இருக்கும் இணைப்பை துண்டித்து விடலாம்)
freenas3
WEB INTERFACEல் பதிவி செய்ய தேவையான PASSWORDஐ FREENAS உடனடியாகத்​தேர்வு  செய்ய​ச்சொல்லும்,நினைவில் நன்கு பதித்து வைத்து கொள்ளும்படியான ​
​கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள்.
freenas4
இப்பொழுது நீங்கள் FREENAS சேவையைத்​தொடங்கும் WEB INTERFACE பார்க்கலாம்,
இது தனிப்பயன் NAS கருவியில் இருப்பது போன்றேயாகும்.
freenas5
அடிப்படை NAS அமைப்பு:
முதலில் நீங்கள் STORAGEஐ அமைக்கவேண்டும், TOOLBAR ல் உள்ள STORAGE ICONஐ கிளிக் செய்தால் STORAGE PANE திரை திறக்கும்,ZFS VOLUME MANAGER பயன்படுத்தி ZFS பிரிக்கலாம் அல்லது UFS VOLUME MANAGER பயன் படுத்தி UFS பிரித்து​ ​க்
கொள்ளுங்கள்
.freenas6
SHARING PANE மூலம் தங்கள் புது தேக்கத்தை உங்கள் வலையமைப்பில் உள்ள மற்ற COMPUTERயுடன் பகிர்ந்து கொள்ளலாம், பலதரப்பான OS பலதரப்பான வரைமுறைகளை ஆதரிக்கும்,
FREENAS உங்களை WINDOWS (CIFS), UNIX/LINUX(NFS) அல்லது APPLE (AFP) பரிமாற்றங்களுக்கு ​ஒத்துழைக்கிறது.
நீங்கள் என்ன PROTOCOL பயன்படுத்தினாலும் ​இந்த தகவல் பரிமாற்றம், பிற தகவல் பரிமாற்றம் போன்றதே.
உதாரணமாக நீங்கள் CIFS SHARE செய்யும் பொழுது தானாக WINDOWS EXPLORER அல்லது FILE EXPLORER வலையமைப்பில் தோன்றிவிடும்.

மேலும் சில ​​சிறப்பம்சங்கள் :
FREENAS பல சேவைகளை வழங்குகிறது , INTERGRATED USER TOOLS மூலம் யார்யாருக்கு எந்தfreenas7 தகவல் ​​பகிரலாம் , அல்லது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ளலாம் FTP,RSYNC,SSH,DYNAMIC DNS போன்ற சேவைகளும் அவற்றில் சில…
PLUGIN SCREEN மிகவும் சுவாரசியமாக உள்ளது , பல மூன்றாந்தரப்பு தொகுப்புகள் இதில் அடங்கும் , நீங்கள் TRANSMISSION BIT TORRENT CLIENT அல்லது PLEX MEDIA SEVER ஐ இங்கு INSTALL செய்து உங்கள் பழைய PCஐ ஒரு BIT TORRENT DOWNLOADER , NETWORK MEDIA SERVER மேலும் NAS ஆக பயன்படுத்தலாம்.

freenas8உங்கள் பழைய COMPUTER ஐ மறுபடியும் உபயோகிக்க FREENAS சிறந்த வழியாகும்.
 
Share:

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்


3 டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

எழுதியவர்: ​சிந்துஜா,
கணினி ஆசிரியர் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software Activist) ஆர்வலர்,
கேந்திரிய வித்யாலயா,
புதுச்சேரி.
Share:

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய


கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.


சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.

அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள்Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.
இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

Share:

பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால் நம் Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற முடியியும்.

இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contacts இல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கைதிரும்ப பெறுவது எளிதாகும்.


Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றாற் போல் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது?உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்ற ஒரு பகுதி இருக்கும்.
Security Settingsஅதில் “Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் ”Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள்.

Choose Trusted Contactsஇப்போது அடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.Choose Trusted Contacts 2இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.
இதன் மூலம் FACEBOOK கணக்கை இலகுவாக மீட்க முடியும்.

Share:

(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய software :


அன்பார்ந்த சககோதர்களே !  ஒவ்வொரு நாளும் நமது Computerக்கு  தேவையான மிக முக்கியமான  சாப்ட்வேர்களை பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து.

இன்றைக்கு (Hard disk)  பிரச்னையை சரி செய்யக்கூடிய  ஒரு  புதிய சாப்ட்வேர்தான் நாம பாக்கபோறம் !!!

புதிச வாங்கிய Computerல் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை software மட்டுமே  இருக்குரனால, புதிய Computer   எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும்.

அதாவது வருடக் கணக்கில் பயன்படுத்தும்  Computerன் வேகம் குறைந்துகொண்டே வரும். காரணம் தேவையென நினைக்கும் மென்பொருள்களையெல்லாம் Download  செய்து அதில் install செய்வதால் , தேவையற்ற கோப்புகளை கணினியில் இருந்து  அழிக்காமல் அப்படியே விட்டுவைப்பதுவும்தான்.

ஒரு சில தேவையில்லாத  software  நீக்கினால் கூட, அம் மென்பொருள் தொடர்புடைய ஒரு சில கோப்புகள் கணினியை விட்டு அகலாது. அந்த மென்பொருளின் ஒரு சில கோப்புகள் கணினியில் உள்ள ரெஜிஸ்ரியில் (Registry) தங்கிவிடும். இதுபோன்று அகலாமல் இருக்கும் கணினியின் ஹார்ட் டிஸ்கிலேயே இருக்கும் கோப்புகள் சில நேரங்களில் பிழைச் செய்திகளைக் காட்டும்.  
பொதுவாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவம்பொழுது (software instalation on computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் சேமிக்கப்படும். தேவையில்லாத மென்பொருளை நீக்கும்பொழுது குறிப்பிட்ட செக்டரில் உள்ள கோப்புகள் மட்டும் அழியும். முன் குறிப்பிட்ட ஒரு சில கோப்புகள் மட்டும் அழியாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்.

இவ்வாறான சூழலில் வேறொரு புதிய மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது, குறிப்பிட்ட இடத்தை அது எடுத்துக்கொள்ளும். எடுக்கும் இடத்தின் அளவு மென்பொருளின் அளவிற்கு குறைவாக இருக்குமாயின், அருகில் உள்ள காலியான செக்டர்களில் (Empty sectors) அத்தகவல்கள் பதியப்படும். இத்தகைய காரணங்களால் கணினி தொடங்குவதில் தாமதம் ஏற்படும்...

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட மென்பொருள்களின்  அழியாமல் இருக்கும் கோப்புகள் அங்கேயே தங்கியிருப்பதால் அத்தகைய கோப்புகள் எரர் செய்திகளைக் காட்டும்.

இத்தகைய பிரச்னைகளை சரிசெய்ய ஒரு அருமையான இலவச software உண்டு.


மென்பொருளின் பெயர்: CheckDiskGUI 1.19

விண்டோஸ் 8, விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸஃ எக்ஸ்பி என அனைத்து விண்டோஸ் இயங்குதளத்தில் இம்மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது.

மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)

மென்பொருளைத் தரவிறக்கம் செய்து எந்த டிஸ்க் டிரைவில் பிரச்னையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பிரச்னைக்குரிய Hard disk சரிசெய்யப்படும்.  (உதாரணத்திற்கு மேலுள்ள படத்தைப் பார்க்கவும்.)



1.19 MB அளவுள்ள இந்த software  Download செய்யச் சுட்டியை  அழுத்தவும் : 

Share:

youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய


பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

 இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல் உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss என்று சேர்த்துக்கொண்டு  (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும்
 அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது
அனைவருக்கும் பகிருங்கள்

Share:

GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ?








கூகிள் ஒரு உலகப்புகழ் பெற்ற  முதன்மை வாய்ந்த search engine என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அது என்று பிறந்தது எங்கு வளர்ந்தது யாரால் வளர்க்கப்பட்டது  என்பதை பற்றிய கதையை நீங்கள்  அறிய  ஆவலுடன் இருந்தால் தொடருங்கள் (இது மிகவும் சுவாரசியம் )
  லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin)

Sergey Brin                  LARRY PAGE

என்ற இரு நபர்களாலும்  1996ம் வருடம்  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த google இது ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களிடம் இருந்தது எந்த வகை  கணினி தெரியுமா ? மிகவும்  விசேசமான கணினி இல்லை
(காயிலாங்கடையில இருந்து கையில் இருந்த காசை எல்லாத்தையும்  போட்டு வாங்குனது ) ஆரம்பத்தில் எதை பற்றி தொழில் ஆரம்பிக்கலாம் என internetல்  தேடும்போது வழக்கம்போல் அவர்களின் முன்னால் result அனைத்தும் குப்பையாக குமிக்கப்பட்டது
குமிக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் தேடியதற்கு சம்மந்தப் பட்டதே இல்லை

நம்மை போல பல பேர் இதே பிரச்சினையை தினமும் சந்தித்து கொண்டிருப்பாரகள் நாம் ஏன் ஒரு நல்ல search engineஐ உருவாக்க கூடாது என இருவரும்  திட்டமிட்டனர் அதன்படி
அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தினர் ஆனால் அதற்கான முதற்கட்ட  பெயர் வைக்கும் முயற்ச்சியில் அவர்களுக்கு பெரிய தோல்வி கிடைத்து



இவர்கள்  கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும்  பெயராகும். (அடேங்கப்பா )


  •  ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 

  • கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 

  • 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் கார் கொட்டகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ( கேட்டுகங்க கார் கொட்டகையில் )

  • புதிய நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்ததால்  முதலீடு செய்வதற்கு  பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

  • இதை வைத்து தனது பயனத்தை ஆரம்பித்த கூகிளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?



$268.44 பில்லியன் டாலர்

  • அன்று வெரும் இரண்டே நபர்களால் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தில் இன்று வேலை செய்யும் நபர்கள் எவ்வளவு தெறியுமா ?

53,861 நபர்கள்

  • அன்று கார் கொட்டகையில் ஆரம்பிக்க பட்ட இது இன்றைய இவர்களின் server roomன் அளவு மட்டும் ஒரு கிராமத்தின் அளவு அதனுடைய வெப்பத்தை தாங்க முடியாமல் இப்பொழுது கப்பலில் தன்னுடைய serverகளை அனுப்பி கடலின் நடுவில் நிறுத்திவைத்துளனர் (இது பெரிய சர்ச்சை ஏற்பட்டது அது வேற கதை  )


உலகத்தின் மதிப்பு மிக்க தேவை வாய்ந்ததில் கூகிள்  5வது இடத்தில் இருக்கிறது (5 World's Most Valuable Brands)
Country: United States
CEO: Larry Page
Website: www.google.com/corporate/index.htm

Share:

Android mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவீன Top 5 Application:-

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்


பொதுவாக புதிய போன் நாம் வாங்கும்பொழுது அதற்க்கு தேவையானapplicationகள் சிலவை அதில் பதிந்தே தரப்பட்டிருக்கும் ஆனால் அவைதிருப்தியானதாக இருப்பதில்லை உதாரணத்திற்கு ஒரு sms applicationஐ எடுத்துகொண்டால் ஆது உங்களுக்கு வரும் messageகளை notification bar களில் காண்பிப்பதோடு சரி அதன் பிறகு நீங்கள் message பகுதிக்கு சென்று அதனை படிக்க வேண்டும் இதுவே வெளியில் கிடைக்கும் ஒரு sms applicationஐ (I sms)  மொபைலில் நிறுவும்பொழுது நமக்கு வரும் smsகளை flash notificationஆக நமது மொபைலில் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல்  அதிலேயே reply செய்யும் வசதியும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதனால்தான் நாம் அதிக வசதிகள் கொண்ட applicationகளை தேடி play storeக்கு  ஓடிக்கொண்டிருக்கிறோம்
சரிதானே ?
சிலவை நல்லதாக இருக்கும் சிலவை உபயோகம் இல்லாததாக இருக்கும் 

ஆனால் இங்கு பதிவிடப்பட்ட 5 applicationகளும் கட்டாயமாக android மொபைல்களில் இருக்க வேண்டியது என என்னால் ரிந்துரைக்கப்படுகிறதுஅதன் தர அடிப்படையில் இதோ

  • 5 Z Archiver 
                   ஆன்றாயிட் மொபைல்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு zip( சுருக்கப்பட்ட கோப்பு) செய்யப்பட்ட fileகளை நாம் உபயோகிக்க முடியாது 
                   ஒரு fileஐ zip செய்யவும் முடியாது ஆனால் அந்த குறைய போக்குவதற்கு play storeல் இலவசமாக நிறைய application இருந்தாலும் இந்த z archiverஐ போல் அருமையாக வேலை செய்ய எந்த ஒரு applicationம் இல்லை என்பதனால் இன்றைய தரப்பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது 
இது PLAY STOREல் இலவசமாக கிடைக்கும் என்பதால் அங்கு சென்று இதனை .DOWNLOAD செய்துகொள்ளுங்கள்

                  
  • 4  File master pro 
                             வாரே வா இதை ஒரு முறை எனது மொபைலில் சோதனை செய்வதற்காக நிறுவினேன் உபயோகிக்க உபயோகிக்க என்னை கவர்ந்து விட்டது இது file manager மட்டும் இல்லை ஒரு அட்டகாசமான security softwareம் கூட ஆம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் safe box என்ற அமைப்பு நம் photos ,videos , files என நமக்கு தேவையான முக்கிய  fileகளை தன்னுடன் இணைத்து கொள்வதால் அதன் உரிமையாளரை தவிற வேறு யாரும் அதனை பார்க்க அது அனுமதிக்காது 
                             ஆதலால் gallery locker போன்ற applicationகளுக்கு இனி உங்களது மொபைலில் வேலை இருக்காது .
                             எனவே இது கண்டிப்பாக உங்களது போனில  பல வழிகளில்  உபயோகமாக இருக்கும் என்பதால் இன்றைய தரப்பட்டியலில்  நான்காம் இடத்தில் இருக்கிறது 

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் இதை டவுன்லோட் செய்ய      

  • 3 flash tranfer 
      
                 பெரும்பாலான நபர்கள்  fileகளை ஒரு மொபைலலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப BLUETOOTHஐ-யே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் 
                 ஆனால் wi-fi வழியாகவும் fileகளை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெறிவதில்லை அந்த வகையில் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியதுதான் இந்த flash transfer 
                 BLUETOOTHஐ விட 10 மடங்கு அதாவது நொடிக்கு (குறைந்தது 1MB அதிகபட்சம் 7MB ) என்ற வேகத்தில் fileகளை பரிமாறிக்கொள்ளும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் BLUETOOTHஐ மறந்து விடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3
                 
இது PLAY STOREல்  கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய

                             

  • 2 puffin web browser
            நான் நமது பகுதியில் இதை பற்றி வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது அன்று முதல் இன்று வரை இதனுடைய வேகத்தை மிஞ்ச எந்த browserம் முன்வரவில்லை சாதாரணமாக வெரும் 2g networkல் கூட இதனுடைய வேகம் பட்டையை கிளப்பிவிடும்  aircel 2g போன்ற அடிமட்ட வேகத்தில் இது உபயோகப்படாது ஏனென்றால் இது serverல் connect ஆக தாமதம் ஏற்படும் விதத்தில் இது வேலை செய்யாது airtel 2g வைத்திருப்பவர்கள் இதை உடனே download செய்து உபயோகித்து பாருங்கள் google chrome Firefox  browserகளை விட 5 மடங்கு வேகம் மட்டுமில்லாமல் இனையத்தின் வீடியோக்களையும் நேரடியாக நீங்கள் பார்க்க முடியும் ஏனெனில் இதில் flash player பதிந்தே தரப்படுகிறது இத்தனை வசதிகளும் இதில் அடங்கியுள்ளதால் இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3.....

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய CLICK HERE

1 SWIFT KEYBOARD
இன்று நமது பகுதியில் முதலிடம் வகிப்பது swift keyboard ஏனெனில் இதில் கொடுக்கப்பட்ட key அம்சம் தட்டச்சு செய்ய எளிமையாக இருப்பதோடு நாம் டைப் செய்த வாக்கியங்களை சேமித்து நாம் அதற்கடுத்து என்ன வார்த்தையை type செய்ய போகிறோம் என்பதை தயாராக எடுத்து வைத்திருக்கும் இதனால் chat செய்யும்பொழுது அதிக வேகத்தில் வார்த்தைகளை உங்களால் type செய்ய இயலும் (நமக்கு நமது காதலர்களுடன் அதி வேகமாக chat செய்வதுதானே முக்கியம்)இந்த விசயத்தில் இது நமக்கு பெரிதும் உபயோகப்படுவதால்  இன்றைய தரப்பட்டியலில் இதற்கான இடம் 1

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட்CLICK HERE

DOWNLOAD LINK VALID TO LIMITED PERIOD 

ZIP FILE EXTRACTING PASSWORD IS SMARTPHONE
Share:

மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்:-


LED - Light Emitting Diode
LCD - liquid crystal display
RAM - random access memory
ROM - read only memory
WIFI - Wireless Fidelity
GPS - Global Positioning System

GSM - Global System for Mobile Communications
GPRS - General Packet Radio Service
CDMA - Code Division Multiple Access
SIM - Subscriber Identity Module
SMS - Short Message Service
MMS - Multimedia Messaging Service
IMEI – International Mobile Equipment Identity
EDGE - Enhanced Data Rates for GSM Evolution
IMEI – International Mobile Equipment Identity
USB -universal serial bus
OS - Operating system
E MAIL - ELECTRONIC MAIL

இன்னக்கி இந்த அரிவு போதும் மிச்சத்த நாளைக்கி பாத்துகலாம்

Share:

ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்:-




  • நீங்கள் உங்களது போனின் Ram மெமரியை clean செய்ய அதிகமாக clean masterஐ பயன் படுத்துவீர்கள் ஆனால் அது முழுமையாக மெமரியை சுத்தம் செய்து கொடுக்காது ஏனெனில் அதற்கு அனைத்து applicationகளையும் நிருத்த அனுமதி வழங்கப் பட்டிருப்பதில்லை root செய்யப்பட்ட  மொபைல்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ram cleanerகள் நிறைய உள்ளன அவை அனைத்தும் super user permission உடன் சேர்ந்து அட்டகாசமாக உங்களது ram மெமரியை clean செய்து கொடுத்து விடும் (கிட்டத்தட்ட போனை restart செய்ததற்கு சமம் )



  • நமக்கு விருப்பமான font style ஐ வைத்துக்கொள்ள முடியும் தமிழுக்கு support செய்யாத மொபைல்களில் தமிழ் மொழியை install செய்ய முடியும் இதனால் நீங்கள் தமிழை உங்களது மொபைலில் தெளிவாக படிக்க முடியும் (குறிப்பு  internet வாயிலாக கிடைக்கும் நம்பிக்கை இல்லாத fontகளை install செய்ய வேண்டாம் அது உங்களது போனில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால் restart செய்யும்பொழுது போன் boot ஆகாமல்கூட போகலாம் இது எனக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது )



custom rom install செய்யலாம்  
கணினியில் நாம் எவ்வாரு அதனுடைய osஐ upgrade செய்து கொள்கிறோமோ  அதேபோல் நமது மொபைலலிலும் software version ஐ  upgrade செய்திட முடியும்  உங்களது போனிற்கான rom internetல்  கிடைக்கும் பட்சத்தில் இதனை cwmன் முறைப்படி root செய்யப்பட்ட மொபைல்களில் மேற்கொள்ளலாம்  (நான் எனது போனை kitkat versionக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் )
  • battery I con மற்றும் signal meter I con களை நமக்கு பிடித்த விதத்தில் பிடித்த வண்ணங்களில்  மாற்றிக்கொள்ளலாம் உங்களது screenன் செயல்பாடுகளை  அப்படியே video எடுக்க முடியும் (இது புதிதாக android kit kat versionல் இருக்கும் ஒரு நுட்பம் ) 


  • இது அனைத்து ஆண்ட்ராயிட் உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய சேர்செய்யுங்கள்
    Share:

    இணையத்தில் சம்பாதிக்க எளிதான வழிகள் :-



    • வணக்கம் நண்பர்களே நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி neobux மூலம் எளிதில் சம்பாதிக்கலாம் ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இதற்கு பொறுமை மிக அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பழமொழியே உள்ளது. சரி வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் 
    • கீழே உள்ள இணைப்பபை click செய்து சேர்ந்து கொள்ளுங்கள். இது எப்பவும் போல தான் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் மற்றும் username கடவுச்சொல் இவை எல்லாம் கொடுத்த பிறகு ஒரு conformation இணைப்பு உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்பி விடுவார்கள் அதை நீங்கள் conformation செய்து விடவும். 

    இணைப்பு : www.neobux.com



    சரி எப்படி சம்பாதிப்பது:

    • முதல் படி :  தினமும் ஒரு ad விடாமல் click செய்யுங்கள் அதாவது நீங்கள் சேர்ந்தவுடன் அதில் view advertisement என்று இருக்கும் அதை click செய்தவுடன் சில விளம்பரங்கள் தோன்றும் அதை ஒன்று விடாமல் click செய்யுங்கள்  ஒவ்வொரு விளம்பரம் பார்க்கும் போது 0.001+1$ போனஸ் வந்துவிடும் இவ்வாறு நீங்கள் பார்ப்பதன் மூலம் மொத்தமாக 0.062 $ கிடைக்கும் ஒரு மாத காலத்தில் மொத்தமாக 1.86 $ கிடைக்கும் அதாவது நீங்கள் தினமும் அனைத்து விளம்பரங்களை பார்த்தால் மட்டுமே சாத்தியம் 
    • இரண்டாம் படி : நண்பர்களே இப்போது நீங்கள் 1$ சம்பாதித்து விட்டீர்கள் எனவே இப்போது உங்களுக்கு 5 referralகள் கிடைக்கும் எனவே இப்போது எல்லாம் இரண்டு மடங்கு தான் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல 

               0.001 $ per ad  x 31 ads x 5 referral  =  0.155 என ஒரே நாளில் கிடைத்து விடும் 

              இதை ஒருமாதம் கணக்கிட்டால் 4.4 $ வரை கிடைக்கும் 

    • மூன்றாம் படி: இது  bulk ஆகா மாறும் அதாவது 5 , 10, 15, 20 என அடுக்காக உங்களை அறியாமலே வந்து விடும் அவ்வறாக நீங்கள் 300 referral வந்தால் போதும் ஒரு நாளைக்கு 6 முதல் 8  $ வந்து விடும் 

             0.005 ads x  4 ads per day x 300 referral = 6 $ 

    • முதல் முப்பது நாட்கள் நீங்கள் தினமும் பொறுமையுடன் விளம்பரங்களை பாருங்கள் அடுத்த மாதம் உங்களுக்கு 30 referralகள் கிடைக்கும் அதற்கு அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு நாளைக்கே 6 $ முதல் 8 $ வரை கிடைக்கலாம் 

    நான் pay pal மூலம் பணம் பெற்றதற்கான ஆதாரம்:





    • இதை போலவே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா உடனே கீழ்கண்ட இணைப்பை click செய்து உங்களை சேர்த்து கொள்ளுங்கள் 
              www.neobux.com


    (இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!!)

    Share:

    முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி

    முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி

    முகபுத்தகத்தில் உங்களது  பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite  செய்வது எப்படி :






    • facebookல் இப்போது நிறைய பேர் page எனும் பக்கங்களை உருவாக்குகின்றனர். அதற்கு like வாங்குவதற்கு மிகவும் கடினபடுவார்கள் ஆனால் ஒரு சில பக்கங்கள் விளம்பரங்கள் மூலம் காசு கொடுத்து like வாங்குவார்கள். உங்களது நண்பர்களை உங்கள் பக்கத்திற்கு invite செய்ய நீங்கள் என்ன செய்வீர்கள் 

    • அதற்கு அந்த பக்கத்தில் ஒவ்வொருவராக கிளிக் செய்து invite செய்வீர்கள். ஒரு சிலருக்கு ஆயிரம் அல்லது அதற்கு மேலேயும் நண்பர்களும் இருக்கலாம். நீங்கள் invite செய்ய ஒவ்வொரு நண்பர்களையும் கிளிக் செய்வதற்குள் மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்  உங்கள் வேலைகலை சுலபமாக்க இது ஒரு வகையான தந்திரம்.

    எப்படி invite செய்வது:

    • முதலில் உங்கள் facebook பக்கத்தை log-in  செய்யவும். அடுத்து உங்கள் fans pageக்கு செல்லவும். 

     




    • அடுத்து அந்த பக்கத்தில் invite your friends அல்லது suggest with your friends என்று இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் ஒரு friends box  ஆனது திரையில் தோன்றும். அணைத்து friends வரை அந்த boxல் நீங்கள் scroll பண்ணவும்.



    • கீழ்கண்ட கோடிங்கை copy  செய்து கொள்ளவும் 


    javascript:elms=document.getElementsByName("checkableitems[]");for (i=0;i<elms.length;i++){if (elms[i].type="checkbox" )elms[i].click()};


    • நீங்கள் chrome பயன்படுத்தினால் Ctrl +  Shift + J   அல்லது Firefox பயன்படுத்தினால்  Ctrl +  Shift + k அழுத்தவும் கீழே அல்லது மேலே ஒரு பாக்ஸ் ஆனது திரையில் தோன்றும் 

    • இப்போது நீங்கள் மேற்கண்ட கோடிங்கை இங்கே paste செய்து ஒரு Enter கொடுத்தால் போதும் ஒரு சில நொடிகளில் அனைத்து நண்பர்களும் select ஆகி விடும். 

    • இப்போது submitஐ கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது சென்று விடும். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்..............
    Share:
    Mohamed Sithick R. Powered by Blogger.

    Search This Blog

    Translate

    Total Pageviews

    Popular Posts

    Contact Form

    Name

    Email *

    Message *

    Followers

    SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)

    Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof

    News

    Food

    Sports

    Technology

    Technology

    Featured

    Translate

    [recent]

    Blog Archive

    Recent Posts

    Pages